தமிழியல் வினா விடைகள்

1) ஒரு நாளுக்கு நூலாசிரியர் தவிர்ந்த பிறர் வழங்கும் புகழுரை?
1) மதிப்புரை
2) பதிப்புரை
3) முன்னுரை
4) அணிந்துரை
2) ‘க’ என்ற எழுத்து உச்சரிப்பில் வேறுபடும் சொல்?
1) மகள்
2) சிங்கம்
3) சோகம்
4) அகம்
3) கவிஞரும்போற்றிய மனிதர். இங்கு “உம்” இடைச்சொல் உணர்த்தும் பொருள்?
1) இழிவு சிறப்பு
2) உயர்வு சிறப்பு
3) ஐயம்
4) முற்று
4) பின்வருவனவற்றுள் வினைமுற்றுத் தொடராக அமைவது?
1) கவிதா பாடினாள்
2) பாடிய கவிதா
3) பாடினாள் கவிதா
4) கவிதா வா
5) “உறு பசிதீர்ப்பாய் என்றுள்ளி வந்தேன்” என்று வாக்கியத்தில் வந்துள்ள சொற்கள்?
1) பெயர்,வினை,இடை,உரி, எனும் நால்வகையினை
2) பெயர்,வினை,உரி எனும் மூவகையின
3) பெயர்,வினை,இடை எனும் மூவகையின
4) பெயரும் வினையும் என இருவகையின
6) வெள்ளம் போல மக்கள் கூட்டம்?
1) திரண்டனர்
2) திரண்டது
3) திரண்டன
4) திரண்டார்
7) வருடாந்த பொதுக் கூட்டத்தில் மன்ற செயலாளரினால்?
1) அறிக்கை சமர்ப்பித்தார்
2) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
3) அறிக்கை சமர்ப்பித்தது
4) அறிக்கையைச் சமர்ப்பித்தார்
8) “உமது புத்தகம் எங்கே?” என்று ஆசிரியர் கேட்ட போது மாணவன்?
1) “தான் அதைத் தொலைத்து விட்டேன்” என்றான்
2) தான் அதைத் தொலைத்து விட்டேன் என்றான்
3) “நான் அதைத் தொலைத்து விட்டேன்” என்றான்
4) நான் அதைத் தொலைத்து விட்டேன் என்றான்
9) பின்வருவனவற்றுள் சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல் வரிசையைத் தெரிவு செய்க?
1) நிலயம்,இணக்கம்,நிச்சயம்,மார்க்கம்
2) உயர்ச்சி,வீழ்ச்சி,பெயர்ச்சி,எழுச்சி
3) எடுகோள்,கருதுகோள்,கடல்கோள்,மேற்கோள்
4) கடைமை,மடைமை,இனிமை,எளிமை
10) வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்றவர்களால் இலங்கை அரசுக்கு அந்நிய ________ அதிகம் கிடைப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன?
1) நன்கொடை
2) மானியம்
3) மூலதனம்
4) செலவாணி
தேர்வு