தமிழியல் வினா விடைகள்
1) நாட்டார் பாடல்களில் இடம்பெறும் உவமை உருவங்கள் வாழ்க்கையோடு?
1) தொடர்புள்ளதாக காணப்படுகின்றன
2) தொடர்புள்ளதாக காணப்படுகின்றது
3) தொடர்புள்ளனவாகக் காணப்படுகின்றது
4) தொடர்புள்ளவையாகக் காணப்படுகின்றன
2) ‘காதலியை காரிருளிற் கானகத்தே’ இங்கு சீர்தோறும் முதலில் இடம்பெறும் “கா”?
1) சிலேடை
2) எதுகை
3) மோனை
4) ஓசை
3) கலகம்,கழகம்,களகம் என்பன முறையே தரும் பொருள்?
1) சபை,குழப்பம்,நெற்கதிர்
2) நெற்கதிர்,சபை,குழப்பம்
3) குழப்பம்,சபை,நெற்கதிர்
4) குழப்பம்,நெற்கதிர்,சபை
4) அரசன்,இடம்,தலைவன் எனப் பல பொருட்களைக் குறிக்கும் ஒரு சொல்?
1) அரி
2) பதி
3) பார்
4) கோன்
5) துன்பந்தரும் ஒன்றை சகித்து கொண்டிருத்தல் என்னும் பொருள் தரும் மரபுத் தொடர்?
1) வாலாட்டுதல்
2) வயிறுகழுவுதல்
3) பல்லைக்கடித்தல்
4) வாய்ப்பூட்டு போடுதல்
6) தன்மரபைஅல்லது வம்சத்தை புகழ்பெறச் செய்தல் என்ற பொருள் தரும் மரபுத்தொடர்?
1) அடிப்படுத்தல்
2) கைகொடுத்தல்
3) ஆட்கொள்ளுதல்
4) அடிவிளக்குதல்
7) அவன் தன்னிடமிருந்த கொஞ்சநஞ்சம் பணத்தையும் வைத்தியத்திற்காக செலவிட்டான். கொஞ்சநஞ்சம் என்ற இணைமொழி தரும் பொருள்?
1) சிறிதளவு
2) பெருந்தொகை
3) சேகரித்ததொகை
4) கணிசமான அளவு
8) சரியான வழிகாட்டி அமையாத சமூகம் திசைமாறி போவதைக் குறிக்கும் உவமைத் தொடர்?
1) வலையிற் சிக்கிய மான்போல
2) உறியில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் நெய்க்கு அலைதல் போல
3) மீகாமன் இல்லாத மரக்கலம் போல
4) அம்மி துணையாக ஆற்றில் இறங்கியது போல
9) கடினமான காரியமாயினும் அதை மீண்டும் மீண்டும் செய்ய முயன்றால் வெற்றி பெறலாம் என்ற கருத்தை தரும் பழமொழி?
1) அடுத்து முயன்றாலும் ஆகுநாளே ஆகும்
2) அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்
3) ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
4) பதறாத காரியம் சிதறாது
10) மரத்தை என்ற பகுபதத்தை பிரித்தால் வரும் அத்து என்பது?
1) சந்தி
2) இடைநிலை
3) சாரியை
4) விகுதி