தமிழியல் வினா விடைகள்
1) பின்வருவனவற்றுள் தொழிற் பெயராக அமையாதது?
1) ஓடுதல்
2) ஓட்டம்
3) ஓடும்
4) ஓடல்
2) ‘ஆழிவாய் சத்தம் அடங்காதோ’ இங்கு ஆழி என்பதன் ஒத்த கருத்து சொல்?
1) கடல்
2) சக்கரம்
3) காற்று
4) அகழி
3) ‘வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்று உபசாரம் செய்தல் நல்ல பழக்கமாகும்’ உபசாரம் என்பதன் எதிர்பொருள் சொல்?
1) அபசாரம்
2) அவமானம்
3) அபகாரம்
4) விவகாரம்
4) சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை சிலரால் ஆட்சேபிக்கப்பட்டது. ஆட்சேபித்தல் என்பதன் எதிர் கருத்து சொல்?
1) நிராகரித்தல்
2) ஆமோதித்தல்
3) பிரேரித்தல்
4) அமுலாக்குதல்
5) உண்மையை உறுதிபடுத்தாமலே ஊர் மக்கள் பரப்பும் ஐயத்திக்கிடமான செய்தி?
1) அறிவிப்பு
2) புகார்
3) வதந்தி
4) அறிவித்தல்
6) வயலும் வயல் சார்ந்த நிலமும்?
1) முல்லை
2) குறிஞ்சி
3) நெய்தல்
4) மருதம்
7) பின்வருவனவற்றுள் பிரெஞ்சு மொழி சொல்லாக அமைவது?
1) கடுதாசி
2) துட்டு
3) துருப்பு
4) பென்சில்
8) கிடைத்தற்கரிய நூதனமான பொருட்கள் மியூஸியத்தில் வைக்கப்பட்டுள்ளன. மியூஸியம் என்ற சொல்லின் தமிழ் சொல்?
1) அருங்காட்சியகம்
2) புலரண்
3) சுவடிகள் கூடம்
4) காட்டரன்
9) கமுகின் இளமைப் பெயர்?
1) குட்டி
2) பிள்ளை
3) நாற்று
4) வடலி
10) குயில் கூவும் மயில்?
1) அலறும்
2) ஆடும்
3) அகவும்
4) இரையும்