தமிழியல் வினா விடைகள்

1) மோட்டெருமை வாவி புக .......” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்?
1) கம்பர்
2) காளமேகப் புலவர்
3) ஒப்பிலாமனிப் புலவர்
4) ஔவையார்
2) எனக்கும் வெத்திலை தா. இங்கு வெத்திலை என்பதன் திருத்தமான வடிவம்?
1) வெத்தில
2) வெத்திலை
3) வெற்றில்லை
4) வெற்றிலை
3) உழவன் வயலில் வேலை செய்கின்றான். இங்கு உழவன் என்பதன் பெண்பாற் சொல்?
1) உழதி
2) உழத்தி
3) உழவி
4) உழவச்சி
4) விடயப் புலமையின்றி வேறொன்றுக்கு குறை கூறக் கூடாது என்பதை உணர்த்தும் பழமொழி?
1) ஆழமறியாது காலை விடாதே
2) ஆனைக்கும் அடி சறுக்கும்
3) ஆடமாட்டாதவள் அரங்கு பிழை என்றாளாம்
4) இளங்கன்று பயமறியாது
5) இக்கரை மாட்டிற்கு அக்கரைப் பச்சை எனும் பழமொழி வெளிப்படுத்தும் கருத்து?
1) எதிலும் திருப்தி இல்லாத மனம்
2) இந்தக் கரையிலுள்ள மாட்டிற்கு அந்த கரையிலுள்ள புல் பச்சையாக தெரியும்
3) மாடு அக்கரையிலுள்ள புல்லையே விரும்பித் தின்னும்
4) எதையும் ரசிக்க வேண்டும்
6) பின்வருவனவற்றுள் வினை பொருளை மட்டும் தரும் ஒரு சொல்?
1) நட
2) அடி
3) அணி
4) அரை
7) அவளுக்கு தான் பிள்ளை மீது அன்புக் குறைந்தது. இங்கு குறைதல் என்பதை உணர்த்தும்?
1) அடிபித்தல்
2) கண்விடல்
3) கண்ணுதல்
4) கண்ணறுதல்
8) என்னிடம் நீ வாலாட்டுதே என்று ராஜா கூறினான் இங்கு வாலாட்டுதல் எனும் மரபுத்தொடர் குறிக்கும் பொருள்?
1) பேசாது தடுத்தல்
2) அடக்கமின்றி பேசுதல்
3) ஏமாற்றுதல்
4) சேட்டை பண்ணுதல்
9) வீட்டை விட்டுப் போ போ என்று அம்மா கத்தினாள் இங்கு போ போ என்பது?
1) இரட்டைக்கிளவி
2) அடுக்குத் தொடர்
3) இணைமொழி
4) அடுக்கிடுக்குத் தொடர்
10) கணவன் இறந்தால் அவன் குடும்பம் மிகுந்த கஷ்டப்பட்டது இதனை வெளிப்படுத்தும் உவமைத்தொடர்?
1) மீகான் இல்லாத மரக்கலம் போல
2) ஏழை சொல் அம்பலம் ஏறாமை போல
3) வலையில் சிக்கிய மான் போல
4) ஏவற் பேய் கூரையை பிடுங்கியது போல
தேர்வு