தமிழியல் வினா விடைகள்

1) தலைமை வாக்கியத்தோடு ஒரு சார்பு வாக்கியமோ அல்லது பல சார்பு வாக்கியங்களோ இணைந்து வருவது?
1) தனிவாக்கியம்
2) கூட்டு வாக்கியம்
3) கலப்பு வாக்கியம்
4) கூற்று வாக்கியம்
2) தம்பி வீட்டோடு இருக்கிறார். இங்கு ஓடு உருபு வெளிப்படுத்தும் பொருள்?
1) வினையடை ஆக்கி
2) வரையறைப்பொருள்
3) அடைமொழிப் பொருள்
4) ஓர் இடத்தில் தொடர்ந்திருத்தல்
3) “இன்” உருபுக்கு பதிலாக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் உருபு?
1) கு
2) ஆல்
3) கண்
4) ஓடு
4) நடந்தனன் என்பதைக் பிரித்து எழுதினால்?
1) நட + த் + அன் + அன்
2) நட + ந் + அன் + அன்
3) நட + ந்த் + அன்
4) நட + ந்த் + அன் + அன்
5) பொற்கொல்லர் பொன்னை பறி என்று அழைப்பர் இங்கு பறி என்பது?
1) குழுவுக்குறி
2) மங்கலம்
3) மரூஉ
4) தகுதி வழக்கு
6) ராமனும் வந்தான்; ராஜாவும் வந்தான். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள நிறுத்தற் குறிகள் முறையே?
1) விட்டிசைக்குறி, உறுப்பிசைக்குறி
2) உறுப்பிசைக்குறி, முற்றுப்புள்ளி
3) தொடரிசைக்குறி, விளங்கிசைக்குறி
4) முடிப்பிசைக்குறி, முக்காற்புள்ளி
7) நீ வேகமாக ஓடுதல் நல்லது இங்கு ஓடுதல் என்பது?
1) ஆக்கப்பெயர்
2) கூட்டுப்பெயர்
3) தொழிற்பெயர்
4) வினையாலனையும் பெயர்
8) நடந்தே என்பதன் வினையடி?
1) நட
2) நடந்து
3) நா
4) நடந்த
9) பாடசாலைக்கு வேகமாக சென்றார்கள் இவ்வாக்கியத்தின் எழுவாய்?
1) பாடசாலை
2) வேகமாக
3) சென்றார்கள்
4) அவர்கள்
10) அவன் நல்லன் இங்கு நல்லன் என்பது?
1) குறிப்பு வினைமுற்று
2) நிகழ்கால தெரிநிலைவினைமுற்று
3) இறந்தகால தெரிநிலைவினைமுற்று
4) எதிர்கால தெரிநிலைவினைமுற்று
தேர்வு