தமிழியல் வினா விடைகள்
1) அவன் ஊதாரித்தனமாகசெலவழிப்பான். இங்கு ஊதாரி என்பதன் எதிர் பதம்?
1) கொடையாளி
2) வள்ளல்
3) செலவாளி
4) சிக்கனம்
2) போலித்தனமான விடயங்களை அவன் விரும்புவதில்லை. இங்கு வந்துள்ள போலி என்பதன் எதிர்கருத்து?
1) பொய்
2) அசல்
3) நசல்
4) பிரதி
3) விமானம் செலுத்துபவன் வலவன் என்பது போல கப்பல் செலுத்துபவன்?
1) மீகாமன்
2) பாகன்
3) இடையன்
4) சாரதி
4) சுருட்டு கட்டு. புத்தகம்?
1) குவியல்
2) சிப்பம்
3) கட்டு
4) கூட்டம்
5) அவன் கடைக்கு சென்று படம் CD வாங்கினான். இங்கு CD என்பதன் தமிழ் வடிவம்?
1) வட்டம்
2) இறுவெட்டு
3) தட்டு
4) பொதி
6) மூகன்,மூகை,மூங்கை என்ற கருத்துக்களை தரும் ஒரு சொல்?
1) கோபக்காரன்
2) புகை
3) மூங்கில்
4) ஊமை
7) பொழி,பொளி,பொலி ஆகிய சொற்கள் முறையே தரும் கருத்துக்கள்?
1) மலை,பாளி,பொய்
2) பெய்,கொத்து,நெல்
3) பெய்,நெல்,கொத்து
4) பெய்,பாய்,கொத்து
8) “வெள்ளத்தில் அழியாது வெந்தழலால் வேகாது” தழல் என்பதன் ஒத்து கருத்து சொல்?
1) விறகு
2) நெருப்பு
3) வெப்பம்
4) நீர்
9) “பெருந்தடங்கன் பிறை நுதலார்” நுதல் என்பதன் ஒத்த கருத்து சொல்?
1) நெற்றி
2) கண்
3) புருவம்
4) கூந்தல்
10) மனிதனைத்த் தேவனாக்கும் மகாகாவியமாக இருக்கிறது இராமாயணம்” காவியம் என்பதன் ஒத்து கருத்து சொல்?
1) புராணம்
2) காப்பியம்
3) பிரபந்தம்
4) பரணி