தமிழியல் வினா விடைகள்
1) புறமுதுகிடல் என்ற மரபுத் தொடருக்கு சமமான பிறிதொரு மரபுத்தொடர்?
1) அடிநகர்தல்
2) அடிப்படுத்தல்
3) அடிபிறக்கிடல்
4) அடிபிடித்தல்
2) ஆறுமுகநாவலர் இலக்கண நூல்கள் பலவற்றை துறைபோகக் கற்றார். இங்கு துறைபோதல் என்ற மரபுத்தொடர் தரும் கருத்து?
1) ஐயந்திரிபறக் கற்றல்
2) பிறநாட்டில் கற்றல்
3) மேலோட்டமாக கற்றல்
4) குருவிடங்கற்றல்
3) அண்ணளவானது என்ற கருத்தை தரும் தொடர்?
1) கிட்டத்தட்ட
2) திட்டவட்டமாக
3) அரைகுறை
4) கையுங்கணக்கும்
4) சேற்றில் புதைத்த யானையைக் காகமும் கொத்தும்” என்ற பழமொழி தரும் உட்கருத்து?
1) ஆணையானாலும் அடி சறுக்கும்
2) தந்திரமுள்ள காக்கையால் வலிமையுடைய யானையும் வெல்ல முடியும்
3) ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்
4) உயர்ந்த நிலையிலிருந்த ஒருவர் தன்னிலை தாலும் போது மிக எளியரும் அவரைத் துன்புறுத்துவர்
5) தமக்கு வேண்டிய பொருள் அண்மையிலே இருக்க அதனை எங்கெங்கோ தேடி அலைதல் என்பதை விளக்கப் பயன்படுத்தப்படும் உவமைத்தொடர்?
1) ஏவற்பேய் கூரையை பிடுங்கியது போல
2) உட்சுவர் இருக்கப் புறச்சுவர் கோலம் செய்வது போல
3) உறியில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் நெய்க்கு அலைதல் போல
4) அகலாது அணுகாது தீயக் காய்வார் போல
6) தமிழ் நெடுங்கணக்கு ஒழுங்கில் அமையாத சொல்கூட்டம்?
1) இலை,ஈட்டி,உறி,ஊதல்
2) நிலம்,நீலம்,நுங்கு,நூபுரம்
3) கரகம்,சட்டி,தட்டி,ஞமலி
4) தங்கம்,பட்டம்,மரம்,வண்ணம்
7) பின்வருவனவற்றுள் கூட்டு பெயராக வருவது?
1) கமலம்
2) நீரேரி
3) கவிதை
4) மடந்தை
8) சிறுவன் சாரைப்பாம்பை கண்டு நடுங்கினான். சாரைப்பாம்பு என்பது?
1) உம்மைத்தொகை
2) உவமைத்தொகை
3) பண்புத்தொகை
4) இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
9) கால்தவறி விழுந்தவனை கைகொடுத்து துக்கினேன். விழுந்தவனை என்பது?
1) வினை எச்சம்
2) தொழிற்பெயர்
3) வினையலானையும் பெயர் குறிப்பு
4) வினை முற்று
10) என்னுடைய ஆசிரியர் வந்தார். இங்கு அன்னுடைய என்பது?
1) இரண்டாம் வேற்றுமை
2) மூன்றாம் வேற்றுமை
3) ஐந்தாம் வேற்றுமை
4) ஆறாம் வேற்றுமை