தமிழியல் வினா விடைகள்
1) பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற வாக்கியத்தை தெரிவு செய்க?
1) கூட்டு பெயர் – வானொலி, குதிரைப்படை, கண்காட்சி
2) ஆக்கப்பெயர் – கொடையாளி, புத்திசாலி, முயற்சி
3) கூட்டுவினை – காட்டிக்கொடு, தந்தியடி, சுட்டிக்காட்டு
4) தெரிநிலை வினைமுற்று – செய்தேன், படித்தானை, படித்தான்
2) இறந்தான் என்பதை இறைவனடி எய்தினான் எனக் கூறும் வழக்கு?
1) குழுஉக்குறி
2) இடக்கரடக்கல்
3) மங்கலம்
4) மரூஉ
3) செயற்ப்படுபொருள் குன்றிய வகை வாக்கியத்திற்கு உதாரணம்?
1) குமரன் நடந்து சென்றான்
2) குமரன் இனிமையாக பாடினான்
3) குமரன் பாட்டு பாடினான்
4) குமரன் படித்தான்
4) மிதிலை நகர் வாயில் கொடிகள் இராம இலக்குமனரை வாருங்கள் வாருங்கள் என அளிப்பான போல அசைந்தன. இங்கு கையாளப்பட்டுள்ள அணி?
1) உவமை
2) உருவகம்
3) தற்குறிப்பேற்றம்
4) உயர்வு நவிற்சி
5) மன்னனிற் கற்றோன் சிறந்தவன் இங்கு மன்னன் என்ற பெயர் சொல்?
1) நான்காம் வேற்றுமை
2) ஐந்தாம் வேற்றுமை
3) ஆறாம் வேற்றுமை
4) ஏழாம் வேற்றுமை
6) இணைப்பிடை சொல்லின் பின் காற்புள்ளி இடப்படும் என்பதற்கு உதாரணம்?
1) கண்ணே, கலங்குவது ஏன்?
2) இனி, ஆக வேண்டிய கருமங்களை கவனிப்போம்.
3) கண்ணன், கர்ணனிடம் பாண்டவருக்காக தூது போனான்
4) தாய்மொழி, கணிதம், விஞ்ஞானம், சமயம், ஆங்கிலம், வரலாறு என்பன கருப்பாடங்கள் ஆகும்
7) நீர் இங்கே இருந்தீரென நான் அறிந்திருந்தால்?
1) உடனே வருகிறேன்
2) உடனே வந்திருப்பேன்
3) உடனே வந்திருந்தேன்
4) உடனே வருவேன்
8) அந்த மரத்தின் ஒவ்வொரு?
1) பழமும் நல்லது
2) பழமும் நல்லவை
3) பழங்களும் நல்லவை
4) பழங்களும் நல்லது
9) அரசன் எவ்வழி செல்கின்றானோ குடிகளும்?
1) அங்கனமே செல்வர்
2) எவ்வழியே செல்வர்
3) அவ்வழியே செல்வர்
4) அவ்வண்ணம் செல்வர்
10) பின்வருவனவற்றுள் சரியான எழுத்து கூட்டாப்பட்ட சொல் வரிசையை தெரிவு செய்க?
1) குறிக்கோள், மேற்கோள், வேண்டுகோள், கருதுகோள்
2) திணைக்களம், களஞ்சியம், கொந்தளிப்பு, ஊழியம்
3) வளர்ச்சி, உயர்ச்சி, தொடர்ச்சி, தளர்ச்சி
4) சம்பளம்,கம்பளி, உளவியல், நாளங்காடி