தமிழியல் வினா விடைகள்
1) பாரதியின் பாடல்களை பாமரரும் படித்தின் புறுகின்றனர் – பாமரர் என்பதன் எதிர்பொருள் சொல்?
1) அறிவிலிகள்
2) நகரத்தவர்
3) பண்டிதர்
4) புத்திசாலிகள்
2) மாரவேள் சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் – இங்கு மாரவேள் என்பவன்?
1) முருகன்
2) சிவன்
3) நந்திவர்வமன்
4) மன்மதன்
3) எந்தவொரு கலைப்படைப்பினையும் காய்தல் இன்றி நோக்கல் வேண்டும் – காய்தல் என்பதன் எதிர்பொருட் சொல்?
1) தேய்தல்
2) உவத்தல்
3) வெறுத்தல்
4) கண்டித்தல்
4) இடையரும் இடைமகளிரான ஆய்ச்சியரும் வாழுமிடம்?
1) குறிஞ்சி
2) முல்லை
3) மருதம்
4) நெய்தல்
5) அரசன் முதலானோர் உலாவரும் போது அதனை பொதுமக்கள் அறியும் படி கூறுபவன்?
1) முரசறைவோன்
2) தூதுவன்
3) கட்டியக்காரன்
4) கூத்தாடி
6) சிங்கத்தின் இளமை பெயர்?
1) போதகம்
2) பறள்
3) அரி
4) குருளை
7) ஆலி, ஆழி, ஆளி என்பன முறையே தரும் பொருள்?
1) ஒலி, கடல், சிங்கம்
2) கடல், ஒலி, சிங்கம்
3) சிங்கம், கடல், ஒலி
4) கடல், சிங்கம், ஒலி
8) பாத்திரம், கப்பல், ஆபரணம் எனப் பல பொருள்களை குறிக்கும் ஒரு சொல்?
1) படகு
2) வளை
3) காலம்
4) அணி
9) ஒருவனுடைய வருகைக்காக ஆவலுடன் காத்திருத்தல் என்ற பொருள் தரும் அருஞ்சொற்றொடர்?
1) குறு குறு நடந்து சிறுகை நீட்டி
2) வழிமேல் விழி வைத்து
3) ஊணுறக்கம் இல்லாமல்
4) உணர்வொழி காலம்
10) பின்வருவனவற்றுள் ஒல்லாந்த மொழி சொற்கள் கொண்ட தொகுதி?
1) தேர்தல், நொத்தாரிசு, தோம்பு
2) கடதாசி, கரத்தை, சப்பாத்து
3) குசினி, பீரோ, பட்டாளம்
4) பென்சில், மைல், சினிமா