தமிழியல் வினா விடைகள்
1) குமரன் வேலைக்கு அப்ளிகேசன் அனுப்பினான். அப்பிளிகேசன் என்ற சொல்லின் தமிழின் வடிவம்?
1) படிவம்
2) விண்ணப்பம்
3) சான்றிதழ்
4) ஆவணம்
2) ஏழை எளியவர் என்பது?
1) இணைமொழித் தொடர்
2) அடுக்குத்தொடர்
3) மரபுத்தொடர்
4) உவமைத்தொடர்
3) அரும்பாடுபட்டு உயிர் வாழுதல் என்னும் பொருள் தரும் மரபுத்தொடர்?
1) வயிறு கடித்தல்
2) வாய்பூட்டு போடுதல்
3) வயிறு கழுவுதல்
4) வயிற்றில் அடித்தல்
4) தொழுகள்ளரை நம்பி நடவதீர். தொழுகள்ளர் என்றால்?
1) ஏமாற்றுக்காரர்
2) ஏமாளிகள்
3) அண்டிக்கெடுப்பவர்
4) களவு செய்பவர்
5) பின்வருவனவற்றுள் மகிழ்ச்சியான உணர்வினை புலப்படுத்த பயன்படும் தொடர்?
1) ஓடிஆடி
2) ஓய்வு ஒழிவு
3) ஆடிப்பாடி
4) ஓட்டமும் நடையும்
6) இட்டுக் கெட்டார் எங்குமில்லை என்ற பழமொழியின் கருத்து?
1) உண்மையை சொல்லிக் கெட்டவர் எங்குமில்லை
2) தருமம் செய்து கெட்டவர் எங்குமில்லை
3) சேமித்து வைத்தவர் கெட்டவர் எங்குமில்லை
4) பொறுமையாக இருந்து கெட்டவர் எங்குமில்லை
7) நெருப்பில் விழுந்த தேள் எடுத்தவனையே கொட்டும் என்ற பழமொழி தரும் உட்பொருள்?
1) தேள் நெருப்பில் விழுந்து விட்டால் அதனை காப்பாற்றக் கூடாது
2) தீயவனுக்கு நன்மை செய்யப்போய் ஆபத்தை விலைக்கு வாங்குதல்
3) தீயவனானாலும் ஒருவன் செய்த நன்றியை மறக்க மாட்டான்
4) நெருப்பில் வீழ்ந்ததேள் வேதனையில் எடுத்தவனையே கொட்டிவிடும்
8) பின்வருவனவற்றுள் வாக்கியம் அல்லாதது எது?
1) யாது செய்வோம்
2) பொய் பேசாதீர்
3) பரமனைப் பாடுங்கள்
4) கட்டறுந்த மாடு
9) பின்வருவனவற்றுள் கூட்டுவாக்கியத்திற்கு உதாரணமாக அமைவது?
1) மேகம் கலைந்தது; மலை பெய்தது; வெள்ளம் பாய்ந்தது
2) மயில் அழகாக ஆடியது
3) பாரதி ஒரு மகாகவி என்பது ஆய்வாளர் முடிவாகும்
4) கண்ணன் குழல் ஊதினான்
10) பூங்குழல் இனிமையாகப் பாடினாள். இங்கு பூங்குழல் என்பது?
1) அன்மொழித் தொகை
2) வேற்றுமைத் தொகை
3) உம்மைத் தொகை
4) உவமைத் தொகை