தமிழியல் வினா விடைகள்
1) இறைவனை ஆண்டவனாய்க் கொண்டு வாழும் நெறி தாச மார்க்கம் எனப்படும். ஆண்டான் என்பதன் எதிர்ச்சொல்?
1) அடிமை
2) அரசன்
3) ஏழை
4) கடவுள்
2) மாணக்கர் ஆசிரியருடன் ஆசிரியர் இல்லத்தில் தங்கியிருந்து கல்வி பயிலுதல்?
1) வனவாசம்
2) தனியார்கல்வி
3) பாடசாலை
4) குருகுலவாசம்
3) தமிழ் நாட்டில் மீடியா (media) சுகந்திரம் பூரணமாக வழங்கப்பட்டுள்ளது. "மீடியா" என்பதன் தமிழ் வடிவம்?
1) ஊடகம்
2) பத்திரிகை
3) செய்தி
4) பரவுதல்
4) ஆண் பெண் இரு பாலர்க்கும் பொதுவாய் அமைந்த சொல் அல்லாதது?
1) ஜனாதிபதி
2) சோம்பேறி
3) பாவி
4) விறலி
5) உலக முடிவின் காலம்?
1) யுகம்
2) ஊழி
3) கலியுகம்
4) இறுதிக்காலம்
6) நாம் எதிர்பாத்த நேரத்திற்கு அந்நிகழ்வு கால்கோளாயிற்று. கால்கோள் என்பதன் கருத்து?
1) புயற்காற்று
2) காலைப்பற்றுதல்
3) கருதுகோள்
4) ஆரம்பமாதல்
7) நெல், புல் என்பவற்றின் இலைப்பெயர்?
1) ஓலை
2) இலை
3) தாள்
4) நாற்று
8) இந்த படம் எந்த காட்சியை பிரதிபலிக்கின்றது?
1) காலைக்காட்சி
2) கடற்கரைக்காட்சி
3) மாலைக்காட்சி
4) மழைக்காட்சி
9) இந்த காட்சியில் உள்ள மரம் எது?
1) பனை
2) கமுகு
3) தென்னை
4) மா
10) இந்த படத்திலுள்ள வானத்தின் நிறம் என்ன ?
1) சிவப்பு
2) ஊதா
3) நீளம்
4) நீலம்